சந்தோஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் யோகிபாபு – மின்முரசு
பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். ரோஜா, தளபதி, இருவர், உயிரே, துப்பாக்கி, செக்கச் சிவந்த வானம், தர்பார் உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தியில் டெரரிஸ்ட் உள்ளிட்ட சில படங்களையும் இயக்கி உள்ளார். 12 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.
ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தில் இவர் பணியாற்றிக்கொண்டு இருக்கும்போதே கிடைத்த இடைவெளியில் தான் இயக்கி வந்த ஜாக் அண்ட் ஜில் என்கிற மலையாள படத்தின் படப்பிடிப்பு பணிகளையும் கவனித்து வந்தார். மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகனாக காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ளார்.
இப்படம் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகி உள்ளது. தமிழில் இப்படம் சென்டிமீட்டர் என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் யோகிபாபு முக்கியமான நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதே கதாபாத்திரத்தை மலையாளத்தில் பிரபல காமெடியனான சௌபின் சாஹிர் நடித்துள்ளார். இப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
Related Tags :
Source: Malai Malar
murugan
Post navigation
கேரளாவில் ஜூன் 1-ந்தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழைஇந்த இளம் நடிகரின் படங்களை ஒன்றுவிடாமல் பார்த்துவிடுவோம் – சூர்யா, ஜோதிகா
Related Posts
2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இரண்டு முறை ‘டாஸ்’ போடப்பட்டது ஏன்?: சங்கக்கரா விளக்கம்
Ilayaraja May 30, 2020 0 comment
சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்- முதலமைச்சர் உத்தரவு
murugan May 30, 2020 0 comment