இந்த இளம் நடிகரின் படங்களை ஒன்றுவிடாமல் பார்த்துவிடுவோம் – சூர்யா, ஜோதிகா – மின்முரசு
இளம் நடிகர் ஒருவரின் படங்களை ஒன்றுவிடாமல் பார்த்துவிடுவோம் என சூர்யாவும், ஜோதிகாவும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
விக்கி டோனர் படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமானவர் ஆயுஷ்மான் குரானா. வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தேசிய விருதுகள், பிலிம் பேர் விருதுகள் என பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார். இவர் நடித்த படங்கள் தமிழிலும் ரீமேக் செய்யப்படுகின்றன.
அந்தவகையில் இவரின் விக்கி டோனர் படத்தை தமிழில் தாராள பிரபு என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டனர். அதேபோல் இவருக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த அந்தாதூன் படமும் தமிழில் ரீமேக் ஆகிறது. இப்படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார். பிரசாந்த் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்நிலையில், பொன்மகள் வந்தாள் படத்தின் புரமோஷனுக்காக சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து பேட்டி அளித்தனர். அப்போது, அவர்கள் இருவரும் ஆயுஷ்மான் குரானாவின் படங்கள் ஒன்றுவிடாமல் பார்த்துவிடுவோம் என தெரிவித்தனர். அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என அவர்கள் கூறினர். இதற்கு ஆயுஷ்மான் குரானா, ‘சூர்யா, ஜோதிகா உங்களின் அன்புக்கு மிக்க நன்றி என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Source: Malai Malar
murugan
Post navigation
சந்தோஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் யோகிபாபுஇந்தியாவுடன் மோதுகிறதா நேபாளம்? சீனா ஆதரவு காரணமா?
Related Posts
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): “உலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முறித்துக்கொள்கிறோம்” – டிரம்ப்
Nila Raghuraman May 30, 2020May 30, 2020 0 comment
வழிபாட்டில் கஞ்சா பயன்படுத்திய இஸ்ரேலியர்கள் – சுவாரஸ்யமான தகவல்களை தந்த தொல்பொருள் ஆய்வு மற்றும் பிற செய்திகள்
Nila Raghuraman May 30, 2020 0 comment