சும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்!
by Karthick Mகொத்து கொத்தாக வரும் வெட்டுக்கிளிகளை அழிக்க ராஜஸ்தான் மாநிலத்தில் ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மின்னல் வேகத்தில் தாக்கி பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளி
வெட்டுக்கிளி கூட்டமாக படையெடுத்து மின்னல் வேகத்தில் தாக்கி பயிர்களை அழித்துவிடும். பல்வேறு நாடுகள் இந்த பூச்சியினத்தால் பெரிதளவு பாதிக்கப்பட்டு உள்ளன. கடந்த சில நாட்களாக இந்தியாவில் குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் பயிர்களை தின்று சேதம் விளைவித்த வெட்டுக்கிளிகள் மகாராஷ்டிரா மாநிலத்துக்குள்ளும் புகுந்து விட்டன.

காய்கறி பயிர்களை சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகள்
நாக்பூர் மாவட்டத்தின் கட்டோலி தாலுகாவில் உள்ள பெட்ரி, கன்காவ் மற்றும் வார்தா மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை ஆரஞ்ச் பயிர் மற்றும் காய்கறி பயிர்களை சேதப்படுத்தின. அதன்பின் பண்டாரா மாவட்டத்துக்குள் நேற்றுமுன்தினம் அவை புகுந்து விட்டன.

கொத்து, கொத்தாக வரும் வெட்டுக்கிளிகள்
அதேபோல் தேமனி கிராமத்தில் ஒரு கி.மீ. சுற்றளவில் உள்ள மரங்களில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் கொத்து, கொத்தாக அமர்ந்து இருந்தன. இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் பூச்சி கொல்லி மருந்து அடிக்கப்பட்டன. இதில் பல வெட்டுக்கிளிகள் செத்து கீழே விழுந்தன.

ஜியோ நிறுவனம் வழங்கும் டபுள் டேட்டா ஆஃபர்.! அம்பானி அதிரடி.!

ட்ரோன் உதவியுடன் பூச்சிக்கொல்லி மருந்து
அதேபோல் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்துள்ளன. இதையடுத்து அங்குள்ள விவசாய பயிர்கள் பெரிதும் சேதமடைந்து வருகின்றன. இந்த நிலையில், ஜெய்ப்பூர் மாவட்டத்தின் சோமு, சமோத் ஆகிய பகுதிகளில், ட்ரோன் உதவியுடன் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

15 நிமிடத்தில் 2.5 ஏக்கர் அளவில்
இதுகுறித்து வேளாம்துறை ஆணையர் ஓம் பிரகாஷ் கூறுகையில், வாடகை ட்ரோன்களை பயன்படுத்தி வெட்டுக்கிளிகள் அழிக்கப்பட்டு வருகிறது எனவும் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதோடு வாகனங்கள் செல்லமுடியாமல் இருக்கும் கரடுமுரடான பகுதிகளிலும் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கப்படும் எனவும் சுமார் 15 நிமிடத்தில் 2.5 ஏக்கர் அளவில் பூச்சிக்கொல்லி தெளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Most Read Articles

மீண்டும் 3ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு.! கடுப்பை கிளப்பும் சீனா.!

திருப்பூர் போலீசாரின் ட்ரோன் வைரல் வீடியோ.! கேரம்போர்டு ஆடிய நபர்கள் பதறி ஓட்டம்.!

பரபரப்பை கிளப்பிய நாசாவின் புதிய தகவல்! செவ்வாய் கிரகத்தில் உயிர்களா?

ட்ரோன் மூலம் பான் மசாலா சப்ளை.! இருவர் கைது.!

உங்க பேஸ்புக்கில் குற்றம் இருக்கு: ஒப்புக் கொண்டு மதுரை மாணவருக்கு 1000 டாலர் பரிசு!

களத்தில் இறங்கிய தல அஜித் குழு: ட்ரோன் மூலம் கிருமிநாசினி!

வோடபோனின் ரூ.251 திட்டம் அறிமுகம்.! எவ்வளவு டேட்டா? எத்தனை நாள் வேலிடிட்டி?

வீடியோ., பெத்த தாய ஓவர்டேக் பண்ணிட்டாரே- ட்ரோன் மூலம் வாக்கிங் செல்லும் நாய்: கொரோனாவா அப்டினா?

ஆண்ட்ராய்டு 11 பீட்டா வெளியீடு ஒத்திவைப்பு.! காரணம் இதுதான்.!

Dunzo டிரோன்கள் பறக்கவிட DGCA ஒப்புதல்! எதற்கு இந்த டிரோன் தெரியுமா?

2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.! புதிய சாதனை.!

ஆயுதம் ஏந்திய ட்ரோன்களை பெறும் துருக்கி இராணுவம்.!
Best Mobiles in India

சாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G
92,999

ரியல்மி 6 ப்ரோ
17,999

ரியல்மி X50 ப்ரோ 5G
39,999

ஒப்போ ரெனோ3 ப்ரோ
29,400

iQOO 3
38,990

சாம்சங் கேலக்ஸி A71
29,999

போகோ X2
16,999

சாம்சங் கேலக்ஸி A51
23,999

ஒப்போ F15
18,170

விவோ V17
21,900

ரெட்மி நோட் 9 ப்ரோ
14,999

ரியல்மி 6 ப்ரோ
17,999

சாம்சங் கேலக்ஸி S10 லைட்
42,099

போகோ X2
16,999

சாம்சங் கேலக்ஸி A51
23,999

ரியல்மி X2 ப்ரோ
29,495

விவோ S1 ப்ரோ
18,580

ஆப்பிள்ஐபோன் 11
64,900

ஒன்பிளஸ் 7T
34,980

ஆப்பிள்ஐபோன் XR
45,900

டெக்னா கமோன் 15 Premier
17,999

ஹானர் 30 ப்ரோ பிளஸ்
54,153

லேனோவோ A7
7,000

எல்ஜி Style3
13,999

சாம்சங் கேலக்ஸி A71 5G
38,999

சாம்சங் கேலக்ஸி A51 5G
29,999

டிசிஎல் 10L
20,599

ஹானர் 30 ப்ரோ
43,250

ஹானர் 30
32,440

ஹானர் பிளே 4T ப்ரோ
16,190