தமிழகத்தில் பொது போக்குவரத்து சாத்தியமா? மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை – மின்முரசு
ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாளுடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை:
தமிழகத்தில் அமலில் உள்ள 4ம் கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் நிறைவடைகிறது. இந்த 4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பல்வேறு தொழில் நிறுவனங்கள் பணிகளை தொடங்கி உள்ளன. பொது போக்குவரத்து தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
இதில், தமிழகத்தில் இதுவரை மேற்கொண்ட கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு முடிவடையும் மே 31-ம் தேதிக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது தளர்த்தலாமா? என்பது குறித்து கலெக்டர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
பொது போக்குவரத்து சேவைக்கான சாத்தியக் கூறு இருக்கிறதா? எனவும் கலெக்டர்களிடம் முதலமைச்சர் கருத்துக்களை கேட்டறிந்தார்.
Related Tags :
Source: Maalaimalar
murugan
Post navigation
லடாக் விவகாரம்: “நரேந்திர மோதி மகிழ்ச்சியாக இல்லை ” – டிரம்ப்பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடி வெளியீட்டிற்கு முன்பே லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ் – படக்குழு அதிர்ச்சி
Related Posts
2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இரண்டு முறை ‘டாஸ்’ போடப்பட்டது ஏன்?: சங்கக்கரா விளக்கம்
Ilayaraja May 30, 2020 0 comment
சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்- முதலமைச்சர் உத்தரவு
murugan May 30, 2020 0 comment