http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__256801784038544.jpg

மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு: திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 9ம் தேதி அன்று வெளியிடப்பட்ட 2020ம் ஆண்டுக்கான முதுகலை நீட் தேர்வு முடிவுகளை எதிர்த்தும், நாடு முழுவதும் இருந்து மத்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் அளித்துள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இளநிலை, முதுநிலை, பட்டயப் படிப்பிற்கான இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய (பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய) மாணவர்களுக்கு தமிழகத்தில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதை வலியுறுத்தியும், பிற மாநிலங்களில் அந்தந்த மாநில இடஒதுக்கீடு விதிகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.