முன்னணி முக்கியஸ்தர்கள் விடுதலை!
by டாம்போதமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்களை தனிமைப்படுத்த கோரி யாழ்ப்பாணம் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டள்ளனர்.குறித்த வழக்கு இன்றைய தினம் நீதி மன்றில் அழைக்கப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தாங்கள் அனைவரும் மன்றால் விடுதலை செய்யப்பட்டதுடன். வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டதாக சட்டத்தரணியும் கட்சியின் முக்கியஸ்தரமான வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தனிமைப்படுத்தல் தொடர்பான வழக்கில் 20 சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததும் மணிவண்ணனின் அலுவலகத்தில் இருந்து வீடு சென்ற சட்டத்தரணி ஒருவர் படையினரால் அச்சுறுத்தப்பட்டுமிருந்தார்.
அதே போன்று மற்றொரு கனிஸ்ட சட்டத்தரணியும் வலி தென் மேற்கு பிரதேச சபையின் வேட்பாளராக போட்டியிட்டவருமான றோய் டிலக்சனின் வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்து வாள்களால் கதவும் மோட்டார் சைக்கிளும் வெட்டி சேதம் விளைவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.