மன்னார் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய பொருள் என்ன?

by

மன்னார் கடலில் மிகப்பெரிய பொருள் ஒன்று மீனவர்களினால் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனை கடல் குண்டு என மீனவர்கள் கூறிய நிலையில், பாதுகாப்பு பிரிவு அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கடற்படையினர் பயணிக்கும் போது பயன்படுத்தும் பெரிய இரும்பு மிதவை என தெரியவந்துள்ளது.

மன்னார் மீனவர்கள் நேற்று கண்டுபிடித்தவுடன், அச்சமடைந்த நிலையில் வெடி குண்டு கிடைத்துள்ளதாக பாதுகாப்பு பிரிவிடம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் அது மிகப்பெரிய மிதவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த இரும்பு மிதவை 300 கிலோ கிராமிற்கும் அதிக நிறையுடைதென்பதனால் அதனை ஒன்றும் செய்ய முடியவில்லை என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

https://dimg.zoftcdn.com/s1/photos/news/full/2020/06/mannar_unknown_things001/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg