http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__427135646343232.jpg

பள்ளிக் கல்வித்துறையில் 7 பேருக்கு பதவி உயர்வு: உடனே பணியில் சேர உத்தரவு

சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்பும் வகையில் 7 பேருக்கு பதவி உயர்வு வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.  இதன்படி, திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு மூலம் கள்ளக்குறிச்சி முதன்மைக் கல்வி அலுவலராகவும், சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் மதன்குமார் பதவி உயர்வு மூலம் ராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலராகவும், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மாவட்ட கல்வி அலுவலர் பாலதண்டபாணி பதவி உயர்வு மூலம் தேனி முதன்மைக் கல்வி அலுவலராகவும், காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி பதவி உயர் மூலம் சென்னையில் உள்ள தொடக்க கல்வி இயக்ககத்தின் துணை இயக்குநராகவும், திருச்சி மாவட்ட லால்குடி மாவட்ட கல்வி அலுவலர் அறிவழகன் பதவி உயர்வு மூலம் சென்னையில் உள்ள தொடக்க கல்வி இயக்குநர் அலுவலக துணை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 இதையடுத்து 2 பேருக்கு நிர்வாக நலன் கருதி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி, சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநர் செந்திவேல் முருகன் அங்கிருந்து மாற்றப்பட்டு திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கண்ட 7 பேரின் பதவி உயர்வு மற்றும் மாறுதல் உத்தரவை பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ளார். மேலும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக  பதவி உயர்வு பெற்றவர்கள் உடனடியாக அந்தந்த மாவட்டத்தில் பணியில் சேர  வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.