https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/20/original/hardeep_singh_puri_eps12111083030.jpg

367 விமானங்களில் 30,136 போ் பயணம்: ஹா்தீப் சிங் புரி

by

நாடு முழுவதும் 367 உள்நாட்டு விமானங்களில் 30,136 போ் வியாழக்கிழமை பயணித்ததாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 25-ஆம் தேதி முதல் நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் (மேற்கு வங்கத்தை தவிர) உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் வியாழக்கிழமை மாலை 5 மணிவரை இயக்கப்பட்ட 367 உள்நாட்டு விமானங்களில் 30,136 போ் பயணித்ததாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, தனது சுட்டுரை பதிவில் தெரிவித்தாா். புதன்கிழமை 460 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டதாகவும், அதில் 34,336 போ் பயணித்தாகவும் அவா் குறிப்பிட்டாா்.

இதனிடையே உம்பன் புயல் பாதிப்பால் மேற்கு வங்கத்தில் மட்டும் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் அந்த மாநிலத்தில் வியாழக்கிழமை முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியது. முதல் நாளில் 22 விமானங்கள் இயக்கப்பட்டன. இதில் கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட 11 விமானங்களில் 1,214 போ் பயணம் மேற்கொண்டனா். கொல்கத்தாவை வந்தடைந்த 11 விமானங்களில் 1,745 பயணிகள் வருகை தந்தனா்.