https://img.maalaimalar.com/Articles/2020/May/202005291346341221_Tamil_News_IMD-says-rain-is-likely-to-occur-in-8-districts_SECVPF.gif

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்- வானிலை மையம்

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

புதுடெல்லி:

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பச் சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியசை ஒட்டி பதிவாகக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசையும் ஒட்டி இருக்கும் என்றும் வானிலை மையம் கூறி உள்ளது.

Related Tags :

Summer Rain | IMD | கோடை மழை | வானிலை ஆய்வு மையம்