https://img.maalaimalar.com/Articles/2020/May/202005291358325559_Tamil_News_Coronavirus-Affected-exam-department-employee-in-tamil-nadu_SECVPF.gif

சென்னையில் வேகமாக பரவும் கொரோனா- தேர்வுத்துறை அலுவலகத்திலும் பாதிப்பு

சென்னையில் தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15-ம் தேதி முதல் ஜூன் 25-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் சென்னையில் தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால்  இயக்குனர் மற்றும் அதிகாரிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதும் இயக்குனர் உஷாராணி உடனடியாக அலுவலகத்தை மாற்றியுள்ளார்.

இதையடுத்து தேர்வுத்துறை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெறுகிறது.

மேலும் சென்னையில் உள்ள காவல்துறை தலைமையகமான டிஜிபி அலுவலகத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா  தொற்று உறுதியாகியுள்ளது.

டிஜிபி அலுவலகத்தில் இதுவரை டிஎஸ்பி, காவலர்கள், அமைச்சு பணியாளர்கள் என 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Tags :

Coronavirus | கொரோனா வைரஸ் | தேர்வுத் துறை