ஈரோடு மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி
ஈரோடு மாவட்டத்தில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72-ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 10,548 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 145-ஆக உள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12,762 ஆக அதிகரித்துள்ளது. 6,304 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 106-ஆக உள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே 71 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 69 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Coronavirus | Erode District | கொரோனா வைரஸ் | ஈரோடு மாவட்டம்