https://img.maalaimalar.com/Articles/2020/May/202005290344438596_Tamil_News_Total-number-of-coronavirus-positive-cases-in-Pakistan_SECVPF.gif

பாகிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது

பாகிஸ்தானில் கொரோனா வைரசுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இஸ்லாமாபாத்:
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. 
கொரோனா தொற்று அதிகரித்து வரும் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 61 ஆயிரத்து 227 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2 ஆயிரத்து 076-க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் கொரோனாவுக்கு 35 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,260 ஆக அதிகரித்துள்ளது. 

Related Tags :

Coronavirus | கொரோனா வைரஸ்