மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே தொற்றை கட்டுப்படுத்த முடியும்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை:
சென்னை தலைமை செயலத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சிறப்பு அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
கொரோனா பரவலை தடுக்க 6 முறை மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் என்பதால் தொற்று அதிகம் பரவியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. சென்னையில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும். நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கொரோனாவை பற்றி மக்கள் அச்சம் பட வேண்டாம்.
மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வாங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றார்.
Related Tags :
Coronavirus | Edappadi Palaniswami | TN Govt | கொரோனா வைரஸ் | எடப்பாடி பழனிசாமி | தமிழக அரசு