https://img.maalaimalar.com/Articles/2020/May/202005291434316875_Tamil_News_All-Party-Meeting-on-Sunday-behalf-of-DMK_SECVPF.gif

மு.க.ஸ்டாலின் தலைமையில் 31-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

சென்னை:

தி.மு.க. இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. சார்பில் வருகிற 31-ந்தேதி தேதி மாலை 4.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நீட் இட ஒதுக்கீடு தொடர்பாகவும், கொரோனா தடுப்பு பணியில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு குறித்தும் ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

DMK | DMK All Party Meeting | MK Stalin | திமுக | திமுக அனைத்து கட்சி கூட்டம் | முக ஸ்டாலின்