
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்: நாளை காலை அனைத்து மொழி செய்தித்தாள்களிலும் வெளியாகிறது
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுத உள்ளார், அனைத்து மொழிகளிலும் அந்த கடிதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் கண்டறியப்பட்டபோது பொது ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி, அதன் மூலம் தெரிவித்தார். அதன்பிறகும் ஒன்றிரண்டு முறை பேசினார். 4-வது கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும்போது அவர் உரையாற்றவில்லை. மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நாளைமறுநாளுடன் (மே 31-ந்தேதி) 4-ம் கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருகிறது. அதன்பின் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து இன்று பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதுகிறார். அனைத்து மொழிகளிலும் அந்த கடிதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை அனைத்து செய்தித்தாள்களிலும் மோடி கடிதம் வெளியாகிறது.