https://img.maalaimalar.com/Articles/2020/May/202005290301570541_Tamil_News_Coronavirus-another-84-positive-cases-in-Kerala_SECVPF.gif

கேரளாவில் மேலும் 84 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் மேலும் 84 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் புதிதாக மேலும் 84 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார். 
இதுதொடர்பாக, பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநிலத்தில் மேலும் 84 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,087 ஆக உயர்ந்துள்ளது. 
இதில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 48 பயணிகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த 31 பயணிகளுக்கும்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது கேரளத்தில் 526 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Coronavirus | Pinarayi Vijayan | கொரோனா வைரஸ் | பினராயி விஜயன்