மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 116 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் 116 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் அதிக அளவில் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.
நேற்று 2,598 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று 2682 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,228 ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளையில் இன்று ஒரே நாளில் 116 உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2098 ஆக உயர்ந்துள்ளது.
மும்பையில் இன்று 1437 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 36,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.