டெல்லி, அரியானா பகுதிகளில் நில அதிர்வு - பொதுமக்கள் அச்சம்
டெல்லி, அரியானா பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
புதுடெல்லி,
அரியானாவின் ரோஹ்தக் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டதால் அச்சம் அடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.