https://img.dailythanthi.com/Articles/2020/May/202005290944456977_Rs-54-Lakhs-Allocated-for-Marawalli-Crop-Protection-Chief_SECVPF.gif

மரவள்ளி பயிர் பாதுகாப்பு பணிகளுக்காக ரூ.54 லட்சம் ஒதுக்கீடு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஹெக்டேருக்கு ரூ.1750 வீதம் 3112 ஹெக்டேரில் பயிர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.54 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டு உள்ளார்.

சென்னைமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-நாமக்கல், சேலம், ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மரவள்ளி பயிர் சாகுபடியில், மரவள்ளிப் பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டதற்கு பயிர் பாதுகாப்பு பணிகளுக்காக ரூ.54 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.ஹெக்டேருக்கு ரூ.1750 வீதம் 3112 ஹெக்டேரில் பயிர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.54 லட்சம் நிதி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளத என அதில் கூறப்பட்டு உள்ளது.