https://img.dailythanthi.com/Articles/2020/May/202005292048459011_HarperCollins-to-publish-PM-Modis-letters-to-mother-goddess_SECVPF.gif

பிரதமர் மோடி தனது அம்மாவுக்கு எழுதிய கடிதங்கள் தொகுப்பு அடுத்த மாதம் வெளியீடு

பிரதமர் மோடி தனது அம்மாவுக்கு எழுதிய கடிதங்கள் தொகுப்பு அடுத்த மாதம் வெளியாகிறது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தனது அம்மாவுக்கு எழுதிய கடித தொகுப்பு அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக ஹார்பர்காலின்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் கூறி இருப்பதாவது:-

பிரதமர் மோடி தனது தாய் ஹீரா பென்னுக்கு பல்வேறு தலைப்புகளில் கடிதம் எழுதி உள்ளார். இந்த கடிதங்கள் அனைத்தும் 1986 ஆண்டிற்கு முந்தையவை ஆகும். பிரதமர் மோடி ஒரு இளைஞனாக ஒவ்வொரு நாளும் தனது தாய்க்கு கடிதம் எழுதும் வழக்கத்தை கொண்டிருந்ததாகவும் அதில் சந்தோஷங்கள், நீடித்த நினைவுகள், துக்கங்கள் இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த கடிதத்தை பிரபல திரைப்பட விமர்சகர் பவானா சோமயா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இந்த கடித தொகுப்பு அடுத்த மாதம் வெளியாகிறது. என தெரிவித்துள்ளது.