https://img.dailythanthi.com/Articles/2020/May/202005290954364086_7466-Coronavirus-Cases-In-India-In-24-Hours-Biggest-Jump_SECVPF.gif

இந்தியாவில் இது வரை இல்லாத அளவு 24 மணி நேரத்தில் 7,466 புதிய கொரோனா பாதிப்புகள்

இந்தியாவில் இது வரை இல்லாத அளவு ஒரே நாளில் 24 மணி நேரத்தில் 7,466 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளது

.புதுடெல்லிசுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் கூறி இருப்பதாவது:-கடந்த 24 மணி நேரத்தில் 7,466 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள்  பதிவாகியுள்ளது. 24 மணி நேர காலப்பகுதியில் 7,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும், கடந்த 24 மணி நேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 175 ஆகும் என கூறப்பட்டு உள்ளது

மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்ந்து உள்ளது. 71,106 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 4,706 ஆக உள்ளது என கூறப்பட்டு உள்ளது.