உலகில் கொரோனா பாதிப்பு தரவரிசையில் இந்தியாவுக்கு 9-வது இடம்; மரணங்களில் சீனாவை முந்தியது
உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு தரவரிசையில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது, இறப்பு எண்ணிக்கையில் சீனாவை முந்தி உள்ளது.
புதுடெல்லிஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 1.6 லட்சத்தைத் தாண்டியது, கொடிய வைரஸ் தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஒன்பதாவது நாடாக திகழ்கிறது, அதே நேரத்தில் இறப்புகளின் எண்ணிக்கை சீனாவின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது என்று மாநில அரசுகள் மற்றும் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன .
கொரோனா வைரஸ் பாதிப்பு முதன் முதலில் கடந்த டிசம்பரில் சீனாவில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் இது உலகெங்கிலும் உள்ள நாடுகளில் கிட்டத்தட்ட 59 லட்சத்துக்கும் அதிகமான மக்களைப் பாதித்து உள்ளது. கொரோனா பாதிப்பால் உலகெங்கிலும் 3.5 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், ஆனால் கடந்த சில நாட்களாக சீனாவில் மிகக் குறைவான புதிய பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.இந்தியாவில் மொத்தம் 1,65,386 கொரோனா பாதிப்புகள் உள்ளன. சீனாவின் 84,106 பாதிப்புகளை விட இரு மடங்காக அதிகரித்துள்ளன என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தால் பராமரிக்கப்படும் ஆன்லைன் நிகழ்நேர புள்ளிவிவரம் காட்டுகிறது. சீனாவில் இறப்புகள் வியாழக்கிழமை இரவு 4,638 ஆக இருந்த நிலையில், இந்தியாவும் 4,711 இறப்புகளுடன் சீனாவை விஞ்சியுள்ளது.உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பாதிப்புகளின் அடிப்படையில், அமெரிக்காவில் 17 லட்சத்துக்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், அதே நேரத்தில் இந்தியாவை விட அதிகமான பாதிப்புகள் உள்ள மற்ற நாடுகள் பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி. துருக்கி இப்போது 10-வது இடத்தில் உள்ளது. ஈரான், பெரு மற்றும் கனடா முறையே 11, 12, 13 இடங்களில் உள்ளன சீனா 14 வது இடத்திலும் உள்ளது. 1 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகளுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரேசில், பெல்ஜியம், மெக்சிகோ, ஜெர்மனி மற்றும் ஈரான் ஆகியவை முதல் 10 இடங்களில் உள்ளன. கனடா மற்றும் நெதர்லாந்திற்கு முறையே 11 மற்றும் 12 வது இடங்கள். அடுத்தபடியாக இந்தியா 13 வது இடத்தில் உள்ளது. இந்த மாதத்தில் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, சிறப்பு ரெயில்கள் மற்றும் விமானங்கள் வழியாக மக்கள் பரவலாக செல்வதால் நாடு தழுவிய ஊரடங்கின் நான்காவது கட்டத்தின் போது பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்துவதாலும். பல மாநிலங்களில் வெளியில் இருந்து வரும் மக்களால் பாதிப்பு அதிகரித்து வருவதும் காரணம்ஆகும்.மார்ச் 21 முதல் உரடங்கு நடைமுறையில் உள்ளது, இது ஆரம்பத்தில் 21 நாட்களாக விதிக்கப்பட்டது, தொடர்ந்து மூன்று முறை நீட்டிக்கப்பட்டுள்ளது, நான்காவது ஊரடங்கு மே 31 அன்று முடிவடையும்.அடுத்த 5-வது கட்ட ஊரடங்கு தொடர்பான எதிர்கால நடவடிக்கை குறித்த முடிவு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது, இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்து முதலமைச்சர்களிடமும் தொலைபேசியில் பேசி உள்ளார்.மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நாட்டின் மிக மோசமாக பாதிக்கபட்ட 13 நகரங்களின் நகராட்சி ஆணையர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபாவும் ஆலோசனை நடத்தி உள்ளார்.டெல்லயில் நேற்று 1,024 புதிய பாதிப்புகள் பதிவாகி மொத்த பாதிப்பு எண்ணிக்கை16,281 ஆக உயர்ந்து உள்ளது, அதே நேரத்தில் அதன் இறப்பு எண்ணிக்கை 3,165 ஆக உயர்ந்து உள்ளது. தேசிய தலைநகரம் ஒரு நாளில் 1,000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகளை பதிவு செய்வது இதுவே முதல் முறை.மிக மோசமான மாநிலமான மராட்டியத்தில் 2,598 புதிய பாதிப்புகளுடன் மொத்தம் 59,546 பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் இறப்புகள் 1,982 ஆக உயர்ந்து உள்ளன.குஜராத்தில் 367 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, மொத்தம் 15,572 ஆக உயர்ந்துள்ளது; இறப்பு எண்ணிக்கை 960 ஆக உயர்ந்து உள்ளது.மேற்கு வங்காளத்தில் வியாழக்கிழமை தனது மிகப்பெரிய ஒரு நாள் பாதிப்பு உயர்வை காட்டியது 344 புதிய பாதிப்புகளுடன் மொத்தபாதிப்பு 4,536 ஆக உயர்ந்து உள்ளது.இந்தியாவில் இதுவரை 33 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன, அதே நேரம் அமெரிக்காவில் 1.5 கோடிக்கு மேல் பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது., ரஷ்யாவில் 97 லட்சத்திற்கும் அதிகமான சோதனைகளும், ஜெர்மனியில் கிட்டத்தட்ட 40 லட்சம் சோத்னைகளும், இங்கிலாந்தில் 38 லட்சம் சோதனைகளும்,அருகில், இத்தாலி மற்றும் ஸ்பெயினில் 35 லட்சத்திற்கும் அதிக சோதனைகளும் நடத்தப்பட்டு உள்ளது.