https://img.dailythanthi.com/Articles/2020/May/202005292136311126_chiefMinister-consultation-with-bank-executives-tomorrow_SECVPF.gif

வங்கி நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் நாளை ஆலோசனை

வங்கி நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

ஊரடங்கால் தமிழகத்தில் உள்ள சிறு, குறு  மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பாதிப்புகள் குறித்தும்  ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் உள்ள 30 லட்சத்திற்கும் அதிகமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்  முடங்கியுள்ளன.

இந்நிலையில் வங்கி நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர், பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறு,குறு நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவது குறித்து வங்கி நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

ஊரடங்கு காரணமாக தற்போது தமிழகத்தில் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்கள் 44 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பை சந்தித்து உள்ளதாகவும், இது  மேலும்  நீட்டிக்கப்படும் போது  வருவாய் இழப்பு  60சதவிகிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது  என்றும் சென்னை ஐ.ஐ.டி தெரிவித்துள்ளது நினைவுகூறத்தக்கது.