https://img.dailythanthi.com/Articles/2020/May/202005292008073208_Some-are-trying-to-politicize-Jayalalithaas-property-JDeepa_SECVPF.gif

ஜெயலலிதாவின் சொத்து விவகாரத்தை அரசியல் ஆக்க சிலர் முயற்சி செய்கின்றனர் - தீபா பரபரப்பு குற்றச்சாட்டு

ஜெயலலிதாவின் சொத்து விவகாரத்தை அரசியல் ஆக்க சிலர் முயற்சி செய்கின்றனர் என தீபா கூறியுள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

 நியாயமான தீர்ப்பு வழங்கிய நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சட்டத்தின் முன் யாரும் தப்பிக்க முடியாது.  அதிமுகவினர் உயர்நீதிமன்றத்தீர்ப்பை தலைவணங்கி ஏற்கவேண்டும்.

நீதிமன்ற உத்தரவு இல்லாமல்  வேதா இல்லத்திற்கு நான் செல்ல மாட்டேன். உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு நாங்களே எதிர்பார்க்கவில்லை. வேதா இல்லத்திற்கு நான் வரக்கூடாது என்பதில் யாருக்கோ திட்டம் உள்ளது. தமிழக அரசு வீண் பழி சுமத்துகிறது. தமிழக அரசு என்ன செய்தாலும் நான் சட்டரீதியாக அதை சந்திப்பேன்.

எங்களுக்கு முழு அதிகாரத்தையும் உயர்நீதிமன்றம் வழங்கியது வரவேற்கத்தக்கது. அதிமுகவினருக்கு எதிராக கேள்வி எழுப்புவதால் என்னை குறி வைக்கின்றனர். தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும். ஜெயலலிதா இறந்த பிறகும் கொச்சைப்படுத்துவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

ஜெயலலிதாவின் சொத்து விவகாரத்தை அரசியல் ஆக்க சிலர் முயற்சி செய்கின்றனர். என்ன நடந்தாலும் சட்ட ரீதியாக எதிர் கொள்ள நான் தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.