https://img.dailythanthi.com/Articles/2020/May/202005291625337093_District-collectors-should-not-declare-themselves-relaxed_SECVPF.gif

மாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவிக்கக்கூடாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவிக்கக்கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

4 ஆம் கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டர்.

மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில்,

வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்கியிருந்து பணி செய்ய விரும்பினால் அனுமதிக்க வேண்டும். கட்டுமானப் பணிகள் எவ்வித தடையும் இல்லாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். சென்னையில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வர மக்கள் ஒத்துழைப்பு தேவை. அரசு கொடுத்திருக்கும் வழிகாட்டுதல்களை மக்கள் சரியாக பின்பற்ற வேண்டும்.

 கொரோனா நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால் தான் வைரஸ் பரவலை தடுக்க முடியும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவிக்கக்கூடாது. தொழிற்சாலைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி தொழிலாளர்கள் பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.