https://img.dailythanthi.com/Articles/2020/May/202005292331171754_Dharavi-reports-41-new-Covid19-cases-total-tally-rises-to_SECVPF.gif

மும்பை தாராவியில் புதிதாக 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை தாராவியில் இன்று புதிதாக 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை, மராட்டியத்தில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. நாட்டில் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 3-ல் ஒரு பங்குக்கு மேற்பட்டவர்கள் மராட்டியத்தை சேர்ந்தவர்களாக உள்ளனா்.  மாநிலத்தில் மும்பை, தாராவி மற்றும் புனே போன்ற பெருநகரங்களில் கொரோனா பாதிப்பு சற்று கூடுதலாக இருக்கிறது.

இந்நிலையில் தாராவியில் இன்று ஒரே நாளில் புதிதாக 41 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,715 ஆக உயர்ந்து உள்ளது. அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 70 ஆக உள்ளது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 62,228 ஆக உயர்ந்து உள்ளது. அங்கு கொரோனா பாதிப்பால் இதுவரை 2,098 பேர் உயிரிழந்துள்ளனர்.