https://img.dailythanthi.com/Articles/2020/May/202005292119094418_99-ICU-beds-in-hospitals-are-occupied-says-BMC_SECVPF.gif

மும்பையில் கொரொனா பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பியது ஐசியு படுக்கைகள்

மும்பையில் கொரொனா பாதிக்கப்பட்டவர்களால் ஐசியு படுக்கைகள் நிரம்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. நாட்டில் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 3-ல் ஒரு பங்குக்கு மேற்பட்டவர்கள் மராட்டியத்தை சேர்ந்தவர்களாக உள்ளனா்.  மாநிலத்தில் மும்பை, தாராவி மற்றும் புனே போன்ற பெருநகரங்களில் கொரோனா பாதிப்பு சற்று கூடுதலாக இருக்கிறது.

மும்பையில் நோய் பாதிப்புகளால் தீவிர சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதனால் மும்பை நகர மருத்துவ மனைகளில் 99% ஐசியு படுக்கைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 7,466 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 175 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.

மாநிலத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,982 ஆக அதிகரித்தது. மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,546 ஆக உள்ளது. மேலும் நோய் பாதிப்பு குறித்து மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 645 ஐசியு படுக்கைகளில் 99% நிரம்பிவிட்டன.

ஆக்சிஜன் உதவியுடன் கூடிய 4,292 படுக்கைகளில் 65% படுக்கைகள் நிரம்பியுள்ளன. 373 வென்ட்டிலேட்டர்களில் 73% உபயோகத்தில் உள்ளன. நேற்று ஒரே நாளில் 1428 பேர் பாதிக்கப்பட்டதையொட்டி, மும்பையில் மொத்த பாதிப்பு 35,273 ஆக உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.