https://img.dailythanthi.com/Articles/2020/May/202005291349358738_IndiaChina-dispute-Avoid-actions-that-will-escalate_SECVPF.gif

தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது -ஐ.நா.

தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது என ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் 

இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே இந்த மாத துவக்கத்தில் இருந்து பிரச்சினை நிலவி வருகிறது. கடந்த மே 5-ஆம் தேதி லடாக் எல்லையில் சீனாவின் போர் படைகள் அத்துமீறி உள்ளே நுழைந்தது. அதன் பின் சிக்கிம் எல்லையில் சீனாவின் படைகள் அத்து மீறியது.

இதனால் இரண்டு எல்லையிலும் சீனா மற்றும் இந்திய படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக தற்போது இரண்டு நாடுகளும் தங்கள் எல்லையில்  படைகளை குவித்து வருகிறது.

அதுமட்டுமின்றி, போருக்கு தயாராக இருக்கும் படி தன் நாட்டு இராணுவத்திற்கு சீனா அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்ததால், எப்போதும் வேண்டும் என்றாலும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதன்கிழமை டுவிட்டர் மூலம் தெரிவித்தார்.

இந்த நிலையில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது என ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்தியாவும், சீனாவும் சர்வதேச எல்லைக்கோட்டு அருகே படைகளை குவித்து வருவதால் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த பிரச்சினையில் யார் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்பதை ஐ.நா. பொதுச் செயலாளர் தீர்மானிக்க முடியாது என அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.