
மராட்டியத்தில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 116 பேர் பலி
மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 116 பேர் பலியாகியுள்ளனர்.
மும்பை,இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரி்ன் எண்ணிக்கை 1,65,799 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 71,105 ஆக உயர்ந்துள்ளது. 89,987 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,706 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால், மத்திய அரசு மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வாய்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் முதல் இடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் மராட்டியத்தில் இன்று மேலும் 2,682 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,228 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக மேலும் 116 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் வைரஸ் தொற்றுக்கு பலியாவர்களின் எண்ணிக்கை 2,098 ஆக உயர்ந்துள்ளது. மும்பையை பொறுத்தவரை புதிதாக 1,437 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 36,710 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல மேலும் 38 பேர் உயிரிழந்ததால், அங்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,173 ஆக உயர்ந்து உள்ளது.