கொரோனா தமிழகத்தில் கட்டுக்குள் இருக்கிறது ,அச்சப்பட தேவையில்லை-முதலமைச்சர் பழனிசாமி
கொரோனா தமிழகத்தில் கட்டுக்குள் இருக்கிறது ,அச்சப்பட தேவையில்லை என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
சென்னை4 ஆம் கட்ட ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் பேசிய முதலமைச்சர் பழனிசாமி கூறியதாவது:-
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா குறைக்கப்பட்டாலும் சென்னையில் அதிகரித்து காணப்படுகிறது.சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்து வரக்கூடியவர்களால் தொற்று அதிகரித்துள்ளது. சென்னையில் மக்கள் தொகை அதிகம் உள்ள காரணத்தினால் தொற்று அதிகரித்துள்ளது. அதேசமயம் கொரோனா தமிழகத்தில் கட்டுக்குள் இருக்கிறது மக்கள் அச்சப்பட தேவையில்லை.சிறப்பான சிகிச்சையால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைத்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும். மக்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால் தான் வைரஸ் பரவலை தடுக்க முடியும். நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும்.கொரோனாவை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.பல்வேறுதுறை சார்ந்த அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டனர்.இதன்மூலம் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.நோய் பரவலை தடுக்க அரசு தவறிவிட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது.மருத்துவ நிபுணர்களின் அறிவுரைப்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வாங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில பேரிடர் மேலாண்மை குழுவுடன் 14 முறை ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. 12 மண்டல அளவிலான சிறப்பு பணிக்குழு அமைத்து கொரோனா தடுப்புப் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.சென்னை, கோவையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளன. வெளிமாநிலத்தில் உள்ள தமிழக தொழிலாளர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. அவசர நிலை கருதி மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தொழில்துறையினருடனும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதுஅதிகாரிகள் அடங்கிய பல்வேறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷனில் கூடுதலாக அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறதுகட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு கபசுர குடிநீர் தொடர்ந்து வழங்கப்படுகிறது.சென்னையில் தொழில் பேட்டைகள் 25 சதவீத தொழிலாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.களப்பணியாளர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் சிகிச்சை செலவை அரசே ஏற்கும்.ஊரக பகுதி மேம்பாட்டுக்கு கொரோனா சிறப்பு நிதியாக ரூ.300 கோடி வழங்கப்பட்டுள்ளது.20 லட்சம் முக கவசங்கள் வாங்கப்பட்டுள்ளது.3 லட்சம் முக கவசங்கள் கையிருப்பில் உள்ளன. 70 பரிசோதனை மையங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறதுவெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. 250 சமூக நல கூடங்களில் உள்ள 2 லட்சம் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.தமிழக அரசின் செலவில் 170 ரயில்களில் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை எதிர்கொள்ள புதிதாக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமுடக்கத்தால் மக்கள் பாதிக்காத வகையில் விலையில்லா அரிசி, சர்க்கரை, எண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.அம்மா உணவகங்கள், சமூக உணவுக்கூடங்கள் மூலம் நாள்தோறும் 2 லட்சம் பேருக்கு உணவு விநியோகம்.24 லட்சம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கி வருகிறோம் என தெரிவித்துள்ளார்கொரோனா தடுப்பு மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்.