https://img.dailythanthi.com/Articles/2020/May/202005292302108397_Railway-Board-approves-4-special-trains-from-June-1_SECVPF.gif

ஜூன் 1ம் தேதி முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்

ஜூன் 1ம் தேதி முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை, இந்தியாவில் ஊரடங்கிற்கு இடையே அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து  ஜூன் 1-ம் தேதி முதல் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி கோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்கோவில், கோவை-காட்பாடி ஆகிய வழித்தடங்களில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.  

முன்னதாக தமிழகத்திற்கு ஏசி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதனை ஏற்று ரயில்வே வாரியம் இந்த ஒப்புதலை அளித்துள்ளது.