தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை,
இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை சுகாதார துறை வெளியிட்டுள்ளது. அதில்,
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மேலும் 618 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை 19,372-ல் இருந்து 20,246 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 12,737 ஆண்கள், 7,504 பெண்கள், திருநங்கைகள் 5 பேர்.
தமிழகத்தில் கொரோனாவுக்கு 8,776 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் 733 பேர், பிற மாநிலங்களில் இருந்து வந்த 141 பேர் என மொத்தம் 674 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 13-60 வயதிற்குட்பட்ட 11,000 ஆண்கள், 6,232 பெண்கள் என மொத்தம் 17,237 பேருக்கு தொற்று உள்ளது.
தமிழகத்தில் 12 வயதிற்குட்பட்ட 1,203 சிறுவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவுக்கு இதுவரை 113 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் 9 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் குணமடைந்தோர் விகிதம்
மொத்த பாதிப்பு 20,246
குணமடைந்தோர் 11,313
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.