https://d13m78zjix4z2t.cloudfront.net/rdhs.png

உலக ஜீரண மண்டல ஆரோக்கிய நாள்: World Digestive Health Day

உலக ஜீரண மண்டல ஆரோக்கிய தினம் இன்று..

World Digestive health day கடந்த 2004 ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது . இது முதலில் World Gastroenterology Association ஆரம்பித்து 45 வது ஆண்டுகள் ஆனதை குறிப்பிடும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மையக்கரு கொண்டு கொண்டாடப்படும். இந்த வருடத்தின் மையக் கருத்து "Gut microbiota" (குடல் நுண்ணுயிரி மண்டலம்) ஆகும்.

குடல் நுண்ணுயிரி மண்டலம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் இந்த வருடம் இத்தினத்தை கடைபிடிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த குடல் நுண்ணுயிரி மண்டலம் மொத்தம் 1000 த்திற்கும் மேற்பட்ட நுண்ணுயிர்கள் வகைகளை கொண்டது. மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஜீன்கள் இந்த மண்டலத்தில் உள்ளன. இந்த ஜீன்கள் நமது உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்த மண்டலத்தில் மூன்றில் ஒரு பங்கு எல்லோருக்குமே பொதுவான பாக்டீரியாக்கள் ஆகும். மீதம் உள்ள இரண்டு பங்கு நமது உடலில் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது.

இதன் வேலைகள்

1) உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

2) சாப்பிடும் உணவு எளிதாக செரிமானம் ஆக உதவுகிறது.

3) கால்சியம், மெக்னீசியம், மற்றும் இரும்புச் சத்து போன்றவை குடல் உறிஞ்ச உதவுகிறது
4)  வைட்டமின் K போலிக் ஆசிட் போன்றவை தயாரிக்கிறது.

இந்த நுண்ணுயிரி மண்டலத்தை பாதிக்கும் காரணிகள்

1)அதிகப்படியான ஆன்ட்டி பயாடிக் - மருந்துகள் உட்கொள்ளுதல்

2)பதப்படுத்தப்பட்ட உணவு, கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள் உட்கொள்ளுதல்

3)சரியாக வேக வைக்கப்படாத உணவுகள் உட்கொள்ளுதல்

4)காய்கறிகள், பழங்கள் எடுத்துக் கொள்ளுவது தவிர்த்தல்

இந்த நுண்ணுயிரி மண்டலம் பாதிக்கப்படுவதால் வரும் நோய்கள்

தீராத வயிற்றுப் போக்கு

ஜீரணிக்க இயலாமை

வயிற்று வலி

உடற் பருமன்

சர்க்கரை  மற்றும் இருதய நோய்கள்

மூளை மற்றும் நரம்பு மண்டலம் தேய்மான நோய்கள்

இந்த குடல் நுண்ணுயிரி மண்டலத்தை பாதுகாப்பது எப்படி?

1) நுண்ணுயிர்கள் அதிகம் உள்ள புளிக்க வைத்த உணவுகளான தயிர், மோர், நீராகாரம், கூழ் போன்றவை அதிகம் பருக வேண்டும்

2)காய்கறிகள், பழங்கள் அதிகம் உட்கொள்ள வேண்டும்.

3)தினமும் அதிகப்படியான நீர் அருந்த வேண்டும்

4)அதிகப்படியான மருந்துகள் எடுத்துக் கொள்ளுவது தவிர்க்க வேண்டும்

5)முறையான உணவுப்பழக்க வழக்கங்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்த world Digestive health day அன்று குடலில் ஆரோக்கிய நுண்ணுயிரி மண்டலத்தை பாதுகாப்போம்.

Dr M RADHA MD DM

Consultant medical Gastroenterologist

 

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.