https://d13m78zjix4z2t.cloudfront.net/minister-vijaya_0.png

அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் மருத்துவர்களை கொச்சை படுத்த வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

by

அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் மருத்துவர்களை கொச்சை படுத்த வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகளே விழிபிதுங்கி நிற்பதாகக் கூறினார். கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதத்தை கடுமையாக போராடி 0.7 சதவீதமாக தமிழக அரசு கட்டுப்படுத்தியிருப்பதாக விஜயபாஸ்கர் தெரிவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விமர்சிப்பதன் மூலம் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் மருத்துவர்களை கொச்சை படுத்த வேண்டாம் என்றும் அரசியல் கட்சியினருக்கு, அவர் தனது கண்டனத்தை தெரிவித்தார். 

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக மீண்டும் வலியுறுத்தி கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், புதிதாக 12 ஆயிரத்து 246 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 4 லட்சத்து 55 ஆயிரத்து 216 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.