https://d13m78zjix4z2t.cloudfront.net/edappadi_31.png

ஊரடங்கு நாளை மறுநாள் நிறைவடையும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

by

4 ஆம் கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டர். 

சென்னை தலைமைச்செயலகத்தில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, வல்லரசு நாடுகளை விட, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகள் குறைவாக உள்ளதாகக் குறிப்பிட்டார். உயிரிழப்புகள் குறைவு என்பதால், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்துள்ள முதலமைச்சர், மருத்துவர்களின் அயராத பணியால் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பாராட்டு தெரிவித்தார். 

சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமே, கொரோனா அதிகரிக்க காரணம் என்றும் கூறினார். ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 மாதங்களாக இலவசமாக பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், 35 லட்சத்து 65 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தலா 2000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

170 ரயில்கள் மூலம் 2 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கால் மக்கள் பாதிக்காத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே, அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைத்து வருவதாகவும், அவற்றின் விலை உயராமல் கட்டுக்குள் இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.