https://d13m78zjix4z2t.cloudfront.net/ina_0.png

தமிழகத்தில் 20,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

by

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,246  ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 141 பேரும் ( மகாராஷ்டிரா 135 பேர் , கேரளா 3, தெலங்கானா 1, கர்நாடகா 1, மேற்கு வங்கம் 1 ) அடக்கம். இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. 

150ஐ கடந்த பலி எண்ணிக்கை: 

தமிழகத்தில் இன்று 9 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 7 பேர் சென்னையை சேர்ந்தவர்களும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருவர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் ஆகும். 

11,000ஐ கடந்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை : 

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,313 ஆக அதிகரித்தது. தற்போது 8,776 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா பாதிப்பு - பாலின வாரியான விவரம்:

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதியான 20,246 பேரில், 12,737 பேர் ஆண்கள், 7,504 பேர் பெண்கள். மேலும் மூன்றாம் பாலினத்தவர்கள் 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகம் முழுவதும் இதுவரை 4,66,550 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 11,334 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

சென்னை மற்றும் செங்கல்பட்டு:  

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 618 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து, அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13,362 ஆக உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டு 61 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் அம்மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தொட்டுள்ளது. 

பிறமாவட்டங்களில் கொரோனா நிலவரம் : 

திருவண்ணாமலை 14, காஞ்சிபுரம் 12, திருவள்ளூர் 9, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் தலா 5, திருநெல்வேலி 4, திண்டுக்கல், அரியலூர், கன்னியாகுமரி, திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

மே மாத கொரோனா பாதிப்பு நிலவரம்:

மே 01 - 2526       மே 18 - 11760           

மே 02 - 2757       மே 19 - 12448       

மே 03 - 3023       மே 20 - 13191    

மே 04 - 3550       மே 21 - 13967  

மே 05 - 4058       மே 22 - 14753

மே 06 - 4829       மே 23  -15,512

மே 07 - 5409       மே24 -  16,277 

மே 08 - 6009       மே25 -  17,082

மே 09 - 6535       மே26 -  17,728

மே 10 - 7204       மே27 -  18,545

மே 11 - 8002       மே 28 - 19,372

மே 12 - 8718       மே 29 - 20,246

மே 13 - 9227      

மே 14 - 9674       

மே 15 - 10108 

மே 16 - 10585

மே 17 - 11224