https://d13m78zjix4z2t.cloudfront.net/i.png

மேற்குவங்கத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்கள் திறப்பு!

by

மேற்கு வங்க மாநிலத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள், போக்குவரத்து சேவைகள் அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களாக முடங்கியுள்ளன. இதனிடையே பாதிப்பு அதிகம் காணப்படும் பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள வழிபாட்டுத்தலங்களை திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் மேற்கு வங்கத்தில் இரண்டு மாதங்களுக்கு பின்னர் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படவுள்ளன.இது தொடர்பாக காணொலிக் காட்சி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் ஜூம் 1 முதல் கோயில்கள், மசூதிகள், குருத்வாராக்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் எனவும் இருப்பினும் 10 பேருக்கு மேல் வழிபாட்டுத் தலங்களுக்குள் இருக்க அனுமதியில்லை என தெரிவித்துள்ளார். அதில் கூட்டங்கள் நடத்தப்படுவதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ள அவர், தேயிலை மற்றும் சணல் தொழிற்சாலைகளும் ஜூன் 1-ம் தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் பணியை தொடங்கலாம் என தெரிவித்துள்ளார்