https://d13m78zjix4z2t.cloudfront.net/eps_37.png

சென்னையை தவிர, மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது: முதல்வர்

by

சென்னையை தவிர, மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கூட்டத்தின் நிறைவில் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தமிழகத்தை பொறுத்தவரை, சென்னையை தவிர, மற்ற மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளதாகவும், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால்தான் நோய் பரவல் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். எனவே பிற மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களை, மாநில எல்லையிலேயே முழுமையாக பரசோதித்து, அதன் பின்னரே அனுமதிக்கவேண்டும் என, மாவட்ட ஆட்சியர்களிடம் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களை அறிவுறுத்திய முதலமைச்சர் பழனிசாமி, மீண்டும் திறக்கப்பட்ட தொழிற்சாலைகளில் தமிழக அரசு பிறபித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 100 நாள் வேலைத்திட்டத்திற்கான தொழிலாளர்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், பொதுக்கழிப்பறைகளை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.