https://d13m78zjix4z2t.cloudfront.net/vtt.png

உதகையில் வெட்டிக்கிளியை பார்த்து பீதியடைந்த பொதுமக்கள்!

by

உதகை அருகே தென்பட்டது, சாதாரண ரக வெட்டுக்கிளி தான் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.  

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், மேலும் ஒரு பிரச்சினை உருவெடுத்துள்ளது. ஆப்பிரிக்க, அரேபிய நாடுகளைத் தாக்கிய வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, இந்தாண்டு இந்திய மாநிலங்கள் சிலவற்றிலும் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு மாநிலங்களைத் தாக்கிய இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்தைத் தாக்காது என்று தமிழக வேளாண் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உதகை அருகே காந்தள் பகுதியில், நேற்று வியாபாரிகள் வழக்கம் போல கடையை திறந்தனர். அப்போது, ஒரு கடை வாசலில், இதுவரை அந்த பகுதியில் கண்டிராத வெட்டுக்கிளி ஒன்று தென்பட்டது. அதனை பிடித்து பாட்டிலில் அடைத்த வியாபாரிகள், மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளித்தனர்.

https://d13m78zjix4z2t.cloudfront.net/inline-images/inna.png

இதனையடுத்து, அந்த வெட்டுக்கிளி குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உத்தரவிட்டார். ஆய்வுக்குப் பிறகு, அது நீலகிரி மாவட்டத்தில் காணப்படும் சாதாரண வெட்டுக்கிளி ரகம்தான் என தெரியவந்துள்ளது.