https://d13m78zjix4z2t.cloudfront.net/sama.png

நடிகைகள் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டேவின் ரசிகர்கள் ட்விட்டரில் மோதல்!

by

விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களின் ரசிகர்கள் இணையத்தில் சண்டையிட்டு கொள்வது வழக்கம். ஆனால் தற்போது நடிகைகள் பூஜா ஹெக்டே மற்றும் சமந்தாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மாறி மாறி சண்டையிட்டு வருகின்றனர். 

தமிழில் முகமூடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தெலுங்கு இந்திமொழிகளில் வளர்ந்து வரும் நடிகை பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் சமீபத்தில்வெளியான  ‘ஆல வைக்குந்த புரமுலோ’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நடிகை சமந்தாவின் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்று வெளியானது. அதில்  "சமந்தா பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக ஒன்றும் இல்லை" என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சர்ச்சைக்குரிய பதிவைக் கண்டு கண்டு கொதித்தெழுந்த சமந்தா ரசிகர்கள் நடிகை பூஜா ஹெக்டேவை சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். 

ஆனால் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருந்த பூஜா ஹெக்டே, “எனது இன்ஸ்டாகிராம் கணக்கை யாரோ ஹேக்செய்துவிட்டனர், கடந்த ஒரு மணி நேரமாக பதிவிடப்பட்ட எதுவும் நான் செய்ததில்லை.. இந்த நேரத்தில் உடனடியாக உதவிய எனது தொழில்நுட்பக் குழுவுக்கு நன்றி. ஒரு வழியாக எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை என் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துவிட்டேன்” என தெரிவித்திருந்தார். 

ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத  சமந்தாவின் ரசிகர்களோ பூஜா ஹெக்டே மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் என வலியுறுத்தி  ட்விட்டரில் #PoojaMustApologizeSamantha என்ற ஹேஷ்டேகை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்..

இந்நிலையில் சமந்தா செய்த ஒரு காரியத்தால், பூஜா ஹெக்டேவிற்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் களமிறங்கியுள்ளனர். நடிகை சமந்தா, இயக்குநர் நந்தினி ரெட்டி, பிரபல பாடகி சின்மயி ஆகியோர் இன்ஸ்டாகிராமில் பேசிக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் அவர்கள் மூவரும், நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டது குறித்து கிண்டல் செய்யும் விதமாக பேசியுள்ளனர். இதனைக்கண்ட பூஜா ஹெக்டேவின் ரசிகர்கள், ஒருவர் தான் செய்யவில்லை என கூறிய பின்பும் அவரை கிண்டல் செய்வது சரியா?  எனக்கூறி சமந்தாவுக்கு எதிராக இணையத்தில் போர் கொடி தூக்கியுள்ளனர். 

ஒரு புறம் சமந்தாவுக்கு ஆதரவாக  #PoojaMustApologizeSamantha என்ற ஹேஷ்டேக்கும் மற்றொரு புறம் பூஜா ஹெக்டேவுக்கு ஆதரவாக #WeSupportPoojaHegde என்ற ஹேஷ்டேக்கையும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து ரசிகர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.