https://d13m78zjix4z2t.cloudfront.net/Rahul_10.png

“இந்தியா - சீனா எல்லை விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை தேவை” - ராகுல் காந்தி

by

இந்தியா - சீனா எல்லை விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை தேவை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

 

இந்தியா - சீனா இடையே எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியிடம் பேசியதாகவும், எல்லை விவகாரத்தில் பிரதமர் மோடி அதிருப்தியான மனநிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி  மற்றும் அதிபர் ட்ரம்ப் இடையே அண்மையில் எந்த உரையாடலும் நடைபெறவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. 

இந்நிலையில், இந்தியா - சீனா இடையே ஏற்பட்டுள்ள எல்லை விவகாரம் குறித்து மத்திய அரசின் அமைதி, பதற்றம் அளிப்பதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை தேவை என கூறியுள்ள ராகுல் காந்தி, எல்லை பிரச்சனை தொடர்பான, தற்போதைய நிலவரம் குறித்து மத்திய அரசு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.