https://d13m78zjix4z2t.cloudfront.net/dho_1.png

2019 உலகக் கோப்பையில் வேண்டுமென்றே இங்கிலாந்திடம் இந்தியா தோற்றது என பென்ஸ் ஸ்டோக் கூறினாரா ?

by

கடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடிக்க வேண்டும் எனபதாலேயே இந்தியா இங்கிலாந்திடம் தோல்வியடைந்ததாக தான் கூறவில்லை என இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென்ஸ் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். 

2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியின் நாயகன் என வர்ணிக்கப்படுபவர் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென்ஸ் ஸ்டோக்ஸ். இவர் “ஆன் ஃபயர்”என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் ஒவ்வொரு விளையாட்டுகளையும் ஆய்வு செய்துள்ளார். இந்த புத்தகம் விரைவில் உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ளது. 

இதனிடையே இந்த புத்தகம் தொடர்பாக தெரிவித்திருந்த பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சிகந்தர் பக்த், கடந்த உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானைப் போட்டிகளிலிருந்து வெளியேற்றவே இந்தியா இங்கிலாந்திடம் தோற்றது என்று பென் ஸ்டோக்ஸ் புத்தகத்தில் கூறியுள்ளார் என தெரிவித்திருந்தார். அவர் இதே கருத்தைக் குறிப்பிட ஒரு வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டார். இது தொடர்பாக ஆதாரத்தை காட்ட முடியுமா என சிகேந்தர் பக்த்க்கு பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். 

https://d13m78zjix4z2t.cloudfront.net/inline-images/stp.png

இந்நிலையில் இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள இங்கிலாந்து வீரர் பென்ஸ் ஸ்டோக், நீங்கள் அதை கண்டுபிடிக்க முடியாது, ஏனென்றால் அதை நான் கூறவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் இதைத் தான் வார்த்தையைத் திரிப்பது அல்லது கிளிக் பேட் என்பார்கள் எனவும் அவர் பதிவிட்டுள்ளார். 

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 38வது லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முன்னதாக இங்கிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 337 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை நோக்கி இந்தியா விளையாடிய அணுகுமுறை இந்திய ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.