https://d13m78zjix4z2t.cloudfront.net/ra_11.png

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

by

வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

நீலகிரி, கோவை, தர்மபுரி கிருஷ்ணகிரி, ஈரோடு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம்  கூறியுள்ளது. அதே வேளையில் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்றும் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால், நாளை மறுநாள் முதல், வரும் 5ஆம் தேதி வரை மீனவர்கள் அரபிக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிப்பதற்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. அதேவேளையில், தென்மேற்கு பருவமழை ஜூன் ஒன்றாம் தேதி கேரளாவில் தொடங்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.