https://d13m78zjix4z2t.cloudfront.net/T.png

வன்முறையை தூண்டும் வகையில் அதிபர் ட்ரம்ப் டிவீட்: மீண்டும் எச்சரித்த ட்விட்டர்

by

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்டுள்ள டிவீட்டை வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக டிவிட்டர் நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரத்தில் நடந்து சென்ற கருப்பினத்தை சேர்ந்த நபர் ஒருவரை பிடித்த 4 காவல்துறையினர், பொது இடத்தில் கருப்பினத்தவரின் கழுத்தின் மீது தங்களது கால்களை மடக்கி தாக்குதல் நடத்தினர். இதில் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆனால் இதனை ஏற்க மறுத்துள்ள போராட்டக்கார்கள் அந்த நான்கு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியாக நடைபெற்ற போராட்டம் ஒரு கட்டத்தில் கலவரமாக மாறியது. 

கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை காவல்துறையினார் கலைக்க முற்பட்டனர், ஆனால் போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதால் நிலைமை இன்னும் மோசமடைந்தது. இதில் மினியாபோலிஸ் காவல்நிலையப் பகுதிக்கு சென்ற ஒரு குழுவினர் அங்குள்ள காவல்நிலையத்தை தீயிட்டு கொழுத்தினர். 

இந்நிலையில் இது தொடர்பாக தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்த அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவில் ஒரு சிறந்த நகரத்தில் இது போன்ற வன்முறைகளை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது எனவும் இதற்கு அங்குள்ள பலவீனமான தலைமையே காரணம். ஒன்று மாகாணத்தில் ஆளுநர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவார், அப்படியில்லை என்றால் ராணுவத்தை அனுப்பி நான் அந்த வேளையை செய்து முடிப்பேன் என பதிவிட்டிருந்தார். 

https://d13m78zjix4z2t.cloudfront.net/inline-images/t1_12.png

மேலும் பதிவிட்ட அவர், போராட்டக்காரர்களில் செயல் இது உயிரிழந்த ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரியாதையை கெடுப்பதாக உள்ளது. போராட்டம் தொடர்பாக ஆளுநர் டிம் வால்ஸ் உடன் பேசியுள்ளேன். ராணுவம் தயாராகவுள்ளது. ஒருவேளை போராட்டக்காரர்கள் அராஜகத்தில் ஈடுபட்டால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில் அதிபரின் இந்த டிவீட்டை மேற்கொள்காட்டியுள்ள டிவிட்டர் நிறுவனம் இந்த ட்விட்டர் பதிவு, ட்விட்டரின் நெறிமுறைகளை மீறி வன்முறையை புனிதப்படுத்துவது போல இருக்கிறது. பொது மக்கள் நலன் சார்ந்த ட்வீட் பதிவாக இது இருக்கும் என்று ஏற்றுக்கொண்டு, இந்த ட்வீட் தொடர்வதற்கு அனுமதி அளிக்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஒரு டிவிட்டை ’நம்பகத்தன்மையற்றது’என ட்விட்டர் நிறுவனம் மேற்கொள் காட்டியதற்காக, அதிபருக்கும் டிவிட்டருக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவரும் வேளையில், தற்போது மேலும் ஒரு டிவிட் சர்ச்சைக்குறியதாக உள்ளது என டிவிட்டர் நிறுவனம் மேற்கொள் காட்டியிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.