https://d13m78zjix4z2t.cloudfront.net/hrak.png

சரியான நடவடிக்கை எடுத்ததால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: ஹெச்.ராஜா

by

சரியான நேரத்தில், சரியான நடவடிக்கை எடுத்ததால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.  

சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, கொரோனாவால் இந்தியாவில் 50 கோடி பேர் வரை பாதிக்கப்படலாம் என உலக நாடுகள் கணித்த நிலையில் மத்திய அரசின் நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப் பட்டுள்ளதாக கூறினார். 20 லட்சம் கோடி ரூபாய்க்கு மத்திய அரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களின் மூலம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை மீண்டு வரும் என்றும் வேலை இழப்பு மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தப்படும் என்றும் ஹெச் ராஜா நம்பிக்கை தெரிவித்தார். 

தமிழகத்திலிருந்து மத்திய அரசு இயக்கிய ரயில்கள் மூலம் 2 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த ஹெச்.ராஜா அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை வெளிமாநில தொழிலாளர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.