https://d13m78zjix4z2t.cloudfront.net/flight_1.png

மதுரை விமானநிலையம் வந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி!

by

பெங்களுரு, டெல்லியிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த ஒரு பெண் உள்பட இரண்டு இளைஞர்கள் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் கடந்த 4 நாட்களாக விமான சேவை நடைபெற்று வருகிறது. விமானத்தில் வரும் பயணிகள் மற்றும் செல்லும் பயணிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் முழுமையான பரிசோதனைக்கு பின்னரே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கின்றனர். இந்நிலையில் நேற்று பெங்களூருவில் இருந்து வந்த பெண் பயணி மற்றும் டெல்லியில் இருந்து வந்த இளைஞர்கள் இருவருக்கும் லேசான காய்ச்சல் இருந்ததையடுத்து அவர்கள் தனிமையை முகாமுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

மதுரை விமான நிலையத்தில் 2 மருத்துவர்கள் தலைமையில் சுகாதாரத் துறை ஊழியர்கள் 23 பேர் கொண்ட குழுவினர் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று பெங்களூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு 65 பேர் வந்தடைந்தனர். இதில் 63 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மீதமுள்ள 64 பயணிகள் தனிமை படுத்துவதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் டெல்லியில் இருந்து வந்த 40 பயணிகளில் 2 இளைஞர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மீதமுள்ள 38 பயணிகள் தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.