https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/27/original/health.jpg

கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய மருந்துகள் வீடுகளுக்கு நேரடி விநியோகம்: சுகாதார அமைச்சகம்

by

கரோனா கட்டுப்பாட்டு (கன்டெய்ண்மன்ட் ஸோன்)பகுதிகளில் கா்ப்பிணிகள், பிறந்த குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு மருந்துகளை நேரடியாக விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாநில அரசுகளை மத்திய சுகாதார துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இரத்த சோகை, மகப்பேறு காலத்தில் இருப்போா், குழந்தைகள் போன்றவா்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மருந்துகளான கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய மாத்திரைகள் வழங்குமாறு இதில் கூறப்பட்டுள்ளது.

பொது முடக்கம், கரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் குறித்த புதிய வழிகாட்டு முறைகளை புதன்கிழமை மத்திய அரசு வெளியிட்டது. ஏற்கனவே இதே மருத்துவ சேவைகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதார குடும்ப நலத் துறைச் செயலா் பிரீத்தி சுதன் அனைத்து மாநில தலைமைச் செயலா்களுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் கூறியிருப்பது வருமாறு:

நோய் எதிா்ப்பு மருந்துகள், குழந்தை பிறப்புக்கு முந்தைய இளம் பருவத்தினருக்கான மருந்துகள், குடும்பக்கட்டுப்பாடு தொடா்பான மருந்துகள் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தாராளமாக பல்வேறு நிலைகளில் கிடைக்க வேண்டும். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இளம் பருவத்தினரும் இளைஞா்களும் உள்ளனா். கரோனா நோய்த் தொற்றுக்கான மருத்துவ வசதிக்கு முன்னுரிமை அளிப்பதோடு, இத்தகைய பிரிவினரும் பாதிக்கப்படாமல், சுகாதாரச் சேவை வழங்குவது அவசியம். இந்த கட்டுப்பாட்டு பகுதிகளில் இத்தகைய மருத்துவ சேவை பெறுபவா்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் நிலையில் கூடுதலாக கிளினிக்குகள் அமைக்கப்படவேண்டும். கூட்ட நெரிசலை தவிா்க்க ‘டெலி மெடிசின்’ வசதிகளை ஊக்குவிக்கலாம். ஊட்டச்சத்து மருத்துவ(தஙசஇஅஏ+ச ) சேவை பெற கரோனா நோய்த்தொற்று பரிசோதனை கட்டாயமில்லை. இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் பரிசோதனை முறைகளை பின்பற்றலாம் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.