பாட்னாவில் சோகம் – கட்டுமான பணியின்போது சிலாப் விழுந்து 3 குழந்தைகள் பலி – மின்முரசு
பீகார் தலைநகர் பாட்னாவில் கட்டுமான பணியின் போது சிலாப் விழுந்து 3 குழந்தைகள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா:
பீகார் மாநில தலைநகரான பாட்னாவில் ஜவகர்லால் நேரு மார்க் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
நேற்று காலை கட்டுமான பணியின்போது சிலாப் திடீரென இடிந்து விழுந்தது. சிலாப்பின் கீழே 3 குழந்தைகள் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து, உடனடியாக அந்த குழந்தைகளை மீட்டுஅருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 3 குழந்தைகளும் பரிதாபமாக பலியாகினர் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, பாட்னா கலெக்டர் ரவிகுமார் கூறுகையில், சிலாப் விழுந்து படுகாயம் அடைந்த 3 குழந்தைகளும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். விபத்தில் பலியான 3 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என தெரிவித்தார்.
கட்டுமான பணியின் போது சிலாப் விழுந்து 3 குழந்தைகள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Source: Maalaimalar
murugan
Post navigation
அரியானாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்கேரளாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது
Related Posts
எம்எஸ் டோனியின் டீம் மீட்டிங் வெறும் 2 நிமிடம்தான்: நினைவு கூர்ந்தார் பார்தீவ் பட்டேல்
Ilayaraja May 29, 2020 0 comment
மாநில முதல்-அமைச்சர்களுடன் அமித் ஷா பேச்சு: லாக்டவுன் குறித்து கருத்து கேட்பு
murugan May 28, 2020 0 comment