நாகர்கோவில் காசி வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்
by DINநாகர்கோவில் காசி வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
நாகர்கோவிலில் சமூக ஊடகங்கள் வாயிலாக பல பெண்களை ஏமாற்றி, மோசடி செய்து பணம் பறித்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளவர் காசி. இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காசி தொடர்பான வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றக்கோரி கன்னியாகுமரி எஸ்பி ஸ்ரீநாத் பரிந்துரைத்திருந்தார். இதைத் தொடர்ந்து, தற்போது காசி வழக்குகளை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.